அறிவியல்

விண்வெளி

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

  • நிலவில் மென்மையான தரையிறக்கத்தை அடைந்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உயர் பட்டியலில் இந்தியா இணைந்தது.
  • நிலவின் துருவப் பகுதியைத் தொட்ட முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் பரிணாமம்

  • சந்திரயான்-1
  • நிலவுக்கு இந்தியாவின் முதல் பயணம் 
  • திட்ட இயக்குனர் – மயில்சாமி அண்ணாதுரை
  • தொடங்கப்பட்டது – அக்டோபர் 22, 2008
  • ஏவுகலன் – PSLV – C11.
  • இந்த செயற்கைக்கோள் சந்திரனை 3,400 முறைக்கு மேல் சுற்றி வந்தது.
  • ஆகஸ்ட் 29, 2009 அன்று விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பணி முடிந்தது.
  • சாதனை – சந்திரயான்-1 ஆர்பிட்டர் பல கருவிகளைப் பயன்படுத்தி நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.
  • சந்திரயான்-2
  • திட்ட இயக்குனர் – M வனிதா
  • தொடங்கப்பட்டது – ஜூலை 22, 2019
  • ஏவுகலன் – GSLV MkIII-M1
  • இது சந்திரனின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்த பணியில், சந்திர மேற்பரப்பில் ஒரு ரோபோ லேண்டரை மென்மையாக தரையிறக்க இந்தியா தனது முதல் முயற்சியை மேற்கொண்டது. ஆனால் அந்த பணி தோல்வியடைந்தது.
  • சந்திரயான்-3
  • திட்ட இயக்குனர் – P வீரமுத்துவேல்
  • ஜூலை 14, 2023 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (SDSC) LVM-3 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
  • லேண்டர் – விக்ரம்
  • ரோவர் – பிரக்யான்
  • திட்ட பணிக்காலம் (லேண்டர் & ரோவர்) – 1 சந்திர நாள் (14 பூமி நாட்கள்)
  • இது ஒரு உள்நாட்டு லேண்டர் தொகுதி (LM), ப்ராபல்ஷன் தொகுதி (PM) மற்றும் ஒரு ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

குறிப்பு

  • லேண்டர் மற்றும் ரோவர் சோலார் பேனல்களால் சார்ஜ் செய்யப்படுவதால், அவை தரையிறங்கும் நேரம் சந்திரனில் அவை இருக்கும் இடத்தில் சூரிய உதயத்துடன் ஒத்துப்போக வேண்டும்.

ISRO பற்றி

  • தலைவர் – எஸ் சோமநாத்
  • தலைமையகம் – பெங்களூரு
  • நிறுவப்பட்டது – ஆகஸ்ட் 15, 1969
Next அறிவியல் >

People also Read