அறிவியல்

விண்வெளி

இஸ்ரோவுக்கு மண் துகள்கள்: பெரியார் பல்கலை.-க்கு காப்புரிமை

  • நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் – 3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் உபகரணங்கள், நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அனார்தசைட் மண் மாதிரியில் பரிசோதிக்கப்பட்ட பிறகே விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
  • அதற்கான மண்ணை பரிசோதித்து இஸ்ரோவுக்கு வழங்கியமைக்காக சேலம், பெரியார் பல்கலைக்கழகத்துக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

பின்னணி

  • சந்திராயன்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தகட்டமாக சந்திராயன்-2 திட்டத்தில் லேண்டர், ரோவர்களை தரையிறக்குவதற்கான மண் மாதிரிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 
  • அப்போது தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி குன்னாமலை கிராமத்தில், நிலவின் பரப்பில் இருப்பதைப் போன்ற கனிமப் பண்புகள், வேதியியல் பண்புகள் கொண்ட அனார்தசைட் எனும் மண் மாதிரி இருப்பது தெரியவந்தது.
  • நிலவின் பரப்பில் இருக்கும் மண் மாதிரி போன்று, அனார்தசைட் மண் மாதிரி ஒத்துப்போனது. பூமி உருவாகும் போது உருவான பழமையான மண் மாதிரி அனார்தசைட் ஆகும். எனவே, இந்த அனார்தசைட் வயது சுமார் 2500 மில்லியன் ஆண்டுகள் முதல் 2900 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
  • சந்திராயன்-1 திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, அனார்தசைட் தோண்டி எடுத்து இஸ்ரோவுக்கு மண் துகள்களாக அனுப்பி வைக்க கோரியிருந்தார். இதையடுத்து 2012-13 ஆகிய கால கட்டங்களில் சுமார் 50 டன் அளவுக்கு எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
  • அதைக் கொண்டு பெங்களூரில் நிலவின் பரப்பில் உள்ளதைப் போன்று, அனார்தசைட் மண் மாதிரிகளை வைத்து லேண்டர், ரோவர்களை மென்மையான முறையில் பத்திரமாக தரையிறக்குவதற்கு சோதனை மையம் அமைக்கப்பட்டது. அந்த மையத்தில் தான் சந்திராயன் திட்டங்களுக்கு லேண்டர், ரோவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டு வருகிறது. 
Next அறிவியல் >

People also Read