அறிவியல்

விண்வெளி

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு

  • எடை குறைந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவெடுத்துள்ளது.
  • பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக மட்டும் 54 முறை பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
  • எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ அண்மையில் உருவாக்கியது. 500 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வசதியாக அந்த வகை ராக்கெட் உருவாக்கப்பட்டது.
  • 10 முதல் 100 கிலோ வரை எடை கொண்ட நானோ, மைக்ரோ அளவிலான செயற்கைக்கோள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் எஸ்எஸ்எல்வி செயல்பட்டு வருகிறது.
  • இந்நிலையில், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. எஸ்எஸ்எல்வி ராக் கெட்டின் தயாரிப்பு மட்டுமல்லாமல், அதன் செயல்பாடு உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் பொறுப்பையும் தனி யாரிடம் வழங்கவுளளதாக இஸ்ரோ உயரதிகாரி தெரிவித்தார்.
  • செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ராக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
  • இதுவரை இஸ்ரோ
    • எஸ்எல்வி-3,
    • ஏஎஸ்எல்வி,
    • பிஎஸ் எல்வி,
    • ஜிஎஸ்எல்வி,
    • எல்விஎம்-3,
    • எஸ்எஸ்எல்வி ஆகிய 6 வகை ராக்கெட்டுகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பு

  • அதில் எஸ்எல்வி-3, ஏஎஸ்எல்வி ஆகியவற்றுக்கு ஏற்கெனவே ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது.
Next அறிவியல் >

People also Read