அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

மருந்து நிறுவனங்களின் சான்றிதழுக்கான காலக்கெடு

  • இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் வணிகத்தை வளர்க்க உதவும் சிறந்த தர நிர்வாகத்தை கொண்டு வர, சுகாதார அமைச்சகம் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஆறு மாதங்களும், பெரிய நிறுவனங்களுக்கு 12 மாதங்களும் உலக சுகாதார அமைப்பு-நல் உற்பத்தி நடைமுறைகள் (WHO-GMP) சான்றிதழ் பெறுவதற்கு அவகாசம் அளித்துள்ளது.
  • மருந்து பொருட்கள், உற்பத்தி முறைகள், இயந்திரங்கள், செயல்முறைகள், பணியாளர்கள் மற்றும் வசதி அல்லது சூழல் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தி தரத்தை கொண்டு வரும் கட்டாயத் தர நிர்ணய கொள்கைகளை GMP கொண்டுள்ளது.

குறிப்பு

  • GMP அமைப்பு முதன்முதலில் 1988-ல் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள். 1945-ன் அட்டவணை M-ல் இணைக்கப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து உடல்களை கொண்டு வர e-clearance portal

  • உடல்களை எடுத்துச் செல்வதில் தாமதத்தைத் தவிர்க்க, சுகாதார அமைச்சகம் மின்-அனுமதி இணைய முகப்பினை (e-clearance portal) தொடங்குவதாக அறிவித்தது.
  • இதன்படி டெல்லி விமான நிலையம் நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் நோடல் மையமாக செயல்படுவதுடன், இச்செயல்முறைக்கு 48 மணிநேரத்தில் ஒப்புதலை வழங்கும்.
  • இது பொதுமக்களுக்கு, சர்வதேச எல்லைகள் வழியாக, மனித உடல்களை எளிதாகவும் சரியான நேரத்திலும் கொண்டு செல்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Next அரசியல் அறிவியல் >

People also Read