நியமனங்கள் பிரதமரின் 2-ஆவது முதன்மை செயலர் நியமனம் பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இவர் என்.கே. சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும், ஜி20 கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதியாகவும், ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராகவும் பதவியில் இருந்தார்
வரலாறு
வரலாறு
முக்கிய தினங்கள் தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் சிங்கின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. கருப்பொருள் - " விளையாட்டுகள், உள்ளடக்கிய சமத்துவ சமூகத்தை உருவாக்கும் காரணி". பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ப்ரைட் ஸ்டார் போர்பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முப்படை பயிற்சி, பிரைட்-ஸ்டார், 21 நாள் பலதரப்பு போர் ஒத்திகை, எகிப்தில் உள்ள கெய்ரோ (மேற்கு) விமான தளத்தில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் அமெரிக்கா சவுதி அரேபியா கிரீஸ் கத்தார் எகிப்து (நடத்தும் நாடு) இந்தியா குறிப்பு இந்திய விமானப்படை (IAF) ஐந்து MiG-29 போர் விமானங்கள், ஆறு போக்குவரத்து விமானங்கள் மற்றும் அதன் சிறப்புப் படை வீரர்களின் குழுவை அனுப்பியுள்ளது. IAF இப்பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். எகிப்து பற்றி அதிபர் - அப்தெல் ஃபத்தா எல்-சிசி தலைநகரம் - கெய்ரோ நாணயம் - எகிப்திய பவுண்ட் சிறந்த நபர்கள் என்.டி. ராமராவ் நினைவு நாணயம் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் ₹100 நினைவு நாணயம் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் வெளியிடப்பட்டது. என்.டி.ராமராவ் பற்றி இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். (1983-84; 1984-89; 1994-95) 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை (TDP) நிறுவினார். விருதுகள் மற்றும் கௌரவம் பத்மஸ்ரீ – 1968 என்டிஆர் தேசிய விருது என்டிஆர் -ஐ கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் தேசிய விருது. ஆந்திரப் பிரதேச அரசால் 1996 இல் நிறுவப்பட்டது. வாழ்நாள் சாதனைகள் மற்றும் இந்தியத் திரைப்படத் துறைக்கு செய்த பங்களிப்புகளுக்காக குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளை அங்கீகரிப்பது. விளையாட்டு BWF உலக சாம்பியன்ஷிப் BWF உலக சாம்பியன்ஷிப் 2023 டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ராயல் அரங்கில் நடைபெற்றது. நட்சத்திர இந்திய வீரர் HS பிரணாய் தனது முதல் BWF உலக சாம்பியன்ஷிப் பதக்கம் (வெண்கலப் பதக்கம்) வென்றார். நியமனங்கள் பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் கீதிகா ஸ்ரீவஸ்தவா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையகத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக (CDA) நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக ஒரு பெண் இருப்பது இதுவே முதல் முறை. 2005 பிரிவு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி. குறிப்பு Charge d'affaires என்பது தூதுர் அல்லது உயர் ஆணையர் இல்லாத நிலையில் ஒரு வெளிநாட்டில் தூதரக பணிக்கு தற்காலிகமாக தலைமை தாங்கும் அதிகாரி குறிக்கும். வெளியுறவு திட்டங்கள் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையே - உயர் ஆணையங்கள் காமன்வெல்த் அல்லாத நாடுகளுக்கு இடையே - தூதரகங்கள் ஆகஸ்ட் 2019, பிரிவு 370 ரத்தானது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உயர் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது. பாகிஸ்தான் பற்றி அதிபர் -…
வரலாறு
விளையாட்டு IBSA உலக விளையாட்டுப் போட்டி 2023 IBSA (International Blind Sports Federation) உலக விளையாட்டுப்போட்டி 2023 இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்றது. பார்வைக் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களின் உலகின் மாபெரும் சந்திப்பு. இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு இந்திய ஆண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. குறிப்பு IBSA உலக விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பார்வையற்றோர் அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ புத்தகம் வெளியீடு ஜூன் 2020 முதல் மே 2022 வரை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் மற்றும் சொற்பொழிவுகள் அடங்கிய இரண்டு தொகுதி புத்தகம் போபாலில் வெளியிடப்பட்டது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வெளியீடு பிரிவால் தொகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் (I&B) - அனுராக் தாக்கூர். நியமனங்கள் காசிரங்கா தேசிய பூங்காவின் முதல் பெண் கள இயக்குனர் அசாம் அரசின் இந்திய வன சேவை அதிகாரி சோனாலி கோஷ் பூங்காவின் அடுத்த கள இயக்குநராக நியமிக்கப்பட்டார். காசிரங்கா தேசியப் பூங்காவின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. காசிரங்கா தேசிய பூங்கா பற்றி அமைவிடம் – அசாம் நிறுவப்பட்டது – 1904 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் - 1985 இந்த பூங்காவில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இந்திய காண்டாமிருகங்கள் உள்ளன.
வரலாறு
விளையாட்டு அல்பேனியாவின் டுரெஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பின் (IWF) உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் பாரலி பெதார்பிரேட் 67 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். நியமனங்கள் பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியின் (NDB) புதிய தலைவராக பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் தில்மா வானா ரூசெஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். NDB, BRICS வங்கி என்றும் அழைக்கப்படுகிறது, இது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஐந்து BRICS நாடுகளால் அமைக்கப்பட்ட பலதரப்பு நிதி நிறுவனமாகும். BRICS பற்றி: BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உலகின் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் தொகுப்பின் சுருக்கமாகும். முதல் நான்கு நாடுகள் 2001 இல் "BRIC" என தொகுக்கப்பட்டன. தென்னாப்பிரிக்கா 2010 இல் சேர்க்கப்பட்டது. புதிய வளர்ச்சி வங்கி (NDB) நிறுவப்பட்டது: 15 ஜூலை 2014 புதிய வளர்ச்சி வங்கி (NDB) தலைமையகம்: ஷாங்காய், சீனா
வரலாறு
நியமனங்கள்: எழுத்தாளரும் இலக்கிய அமைப்பாளருமான மாதவ் கௌசிக் தேசிய சாகித்ய அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்: குமுத் சர்மா சாகித்ய அகாடமி பற்றி1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு இலக்கிய கௌரவமாகும். அகாடமி, தான் அங்கீகரித்த மொழிகளில் இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் 24 விருதுகளையும், இந்திய மொழிகளில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு சம எண்ணிக்கையிலான விருதுகளையும் வழங்குகிறது. சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருதுக்குப் பிறகு, இந்திய அரசின் இரண்டாவது மிக உயர்ந்த இலக்கிய விருது ஆகும்
வரலாறு
நியமனங்கள் பொதுத்துறை நிறுவன இயக்குநராக நாராயணன் திருப்பதி பொறுப்பேற்பு நாராயணன் திருப்பதி, ஊரக மின் வசதியாக்க பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 3 –ஆவது முறையாக சீன அதிபரான ஷி ஜின்பிங் சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடர்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங்குக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபர் பதவி வகிக்கும் ஒரே தலைவர் என்கிற பெருமையை ஷி ஜின்பிங் பெற்றுள்ளார். ஹெச்3என்2 பருவகால காய்ச்சலுக்கு இருவர் பலி நாட்டின் பல மாநிலங்களில் ஹெச்3என்2 பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குழந்தைகள், சிறார்கள், முதியோர் ஆகியோரே பருவகால காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்ஃப்ளூயன்ஸா A (H3N2) பற்றி: பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும். இன்ஃப்ளூயன்ஸா ஏ துணை வகை H3N2 தான் நாட்டில் தற்போதைய சுவாச நோய்க்கு முக்கிய காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
வரலாறு
நியமனங்கள் உலக வங்கி தலைவர் பதவி: அஜய் பங்காவுக்கு இந்தியா ஆதரவு உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்காவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. உலக வங்கிக்குத் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி,சீக்கியர் என்ற பெருமையை அஜய் பங்கா பெறுவார்.
வரலாறு
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் எல்லை சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எல்லையில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளித்து நாட்டைக் காக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். எல்லையில் ரூ.724 கோடி மதிப்பில் 22 பாலங்கள் உள்பட 28 உள் கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் லடாக்கில் எட்டு, அருணாசல பிரதேசத்தில் ஐந்து, ஜம்மு-காஷ்மீரில் நான்கு, சிக்கிம், பஞ்சாப், உத்தரகண்டில் தலா தலா மூன்று, ராஜஸ்தானில் இரண்டு திட்டங்கள் அடங்கும். கடந்த 2021இல் எல்லைச் சாலைகள் அமைப்பு 102 உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றியது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 28 திட்டங்களுடன் சேர்த்து 2022இல் 103 உள்ட்டமைப்புத் திட்டங்களை எல்லைச் சாலைகள் அமைப்பு நிறைவேற்றியது. நியமனங்கள் சுங்கத்துறை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்பு சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றார். சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களும், சென்னை பயணிகள் விமான நிலையம், மீனம்பாக்கம் சரக்குகள் கையாளும் முனையம், உள்நாட்டு முனையங்களான கான்கார், உள்ளிட்டவை சென்னை மண்டல முதன்மை தலைமை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர் இதற்கு முன்பு புது தில்லியில் உள்ள நேரடி வரிகள் வாரியத்தில் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.