வரலாறு

நியமனங்கள்

பொதுத்துறை நிறுவன இயக்குநராக நாராயணன் திருப்பதி பொறுப்பேற்பு

  • நாராயணன் திருப்பதி, ஊரக மின் வசதியாக்க பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

3 –ஆவது முறையாக சீன அதிபரான ஷி ஜின்பிங்

  • சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடர்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
  • இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங்குக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபர் பதவி வகிக்கும் ஒரே தலைவர் என்கிற பெருமையை ஷி ஜின்பிங் பெற்றுள்ளார்.

ஹெச்3என்2 பருவகால காய்ச்சலுக்கு  இருவர் பலி

    • நாட்டின் பல மாநிலங்களில் ஹெச்3என்2 பருவகால காய்ச்சல்  பரவல் அதிகரித்துள்ளது.
    • குழந்தைகள், சிறார்கள், முதியோர் ஆகியோரே பருவகால காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • இன்ஃப்ளூயன்ஸா A (H3N2) பற்றி:
  • பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும். இன்ஃப்ளூயன்ஸா ஏ துணை வகை H3N2 தான் நாட்டில் தற்போதைய சுவாச நோய்க்கு முக்கிய காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
Next வரலாறு >

People also Read