வரலாறு

பாதுகாப்பு , தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

ரூ. 667 கோடியில் டோர்னியர் விமானங்கள்

ஹெச்ஏஎல் உடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

  • இந்திய விமானப் படைக்காக ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.667 கோடியில் 6 டோர்னியர்-228 ரக விமானங்களைக்  கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
  • எளிதில் அணுக முடியாத தொலை துார பகுதிகளில் இந்திய விமானப் படையின் செயல்பாடுகளை இந்த 6 டோர்னியர் விமானங்கள் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டோர்னியர் -228 ரக விமானம் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடும் திறன் மிக்க இலகு ரக விமானமாகும்.  போக்குவரத்து, கடல் சார் பாதுகாப்புக்கான கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், தீவுப் பகுதிகள் ஆகியவற்றில் குறைந்த துார பயணங்களுக்கு இந்த விமானம் மிகவும் ஏற்றது.

முன்னாள் அக்னிவீரர்களுக்கு பிஎஸ்எஃப் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு

  • அக்னிவீரர்கள் திட்டத்தின் கீழ் பணியாற்றிய முன்னாள் வீரர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • எல்லைப் பாதுகாப்புப் படை பணியாளர் தேர்வு விதிகள் 2015-இல் இதற்கென தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அறிவிக்கை மூலமாக இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • “ராணுவ பணியிலிருந்து விடுவிக்கப்படும் 75 சதவீத அக்னி வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுகளின் வேலைவாய்ப்பில் வயது உச்சவரம்பு தளர்வு சலுகையுடன் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

NPDRR பற்றி:

  • NPDRR என்பது பல பங்குதாரர்களின் தேசிய தளமாகும், அங்கு அனைத்து பங்குதாரர்களும் அறிவு, அனுபவங்கள், பார்வைகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பேரழிவு அபாயத்தைக் குறைப்பதற்கான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் போக்குகளைப் பற்றி விவாதிக்கவும் (DRR).
    அவை இடைவெளிகளைக் கண்டறிந்து, பரிந்துரைகளைச் செய்கின்றன, மேலும் பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகளை மேலும் துரிதப்படுத்த கூட்டாண்மைகளை உருவாக்குகின்றன.
Next வரலாறு >

People also Read