வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

ஜம்மு-காஷ்மீரில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை

  • ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் புதிய பயங்கரவாத குழுக்களுக்குத் தொடர்புடைய 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், சோபியான், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
  • பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லக்ஷ்ர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவோடு ஜம்மு-காஷ்மீர் விடுதலை வீரர்கள், முஜாஹிதீன் காஸ்வாத்-உல்-ஹிந்த் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

NIA பற்றி

  • தலைமை இயக்குனர் – தினகர் குப்தா
  • தலைமையகம் – புது தில்லி
  • நிறுவப்பட்டது – 31 டிசம்பர் 2008

ப்ளுஸ்டார் நடவடிக்கை பற்றி

  • இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாதி பிந்தரன் வாலேவுக்கு எதிராக அமிருதசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட 1984 “ஆபரேஷன் ப்ளு ஸ்டார்“ நடவடிக்கைக்கு பதிலடியாக, 1985-இல் ஏர் இந்தியா விமானம் கனிஷ்கா காலிஸ் தானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 329 பேரும் இந்திய வம்சாவளியினரான கனடா பிரஜைகள். 
Next வரலாறு >

People also Read