வரலாறு

பாதுகாப்பு

ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2023 (JIMEX 23)

  • இந்தியா கடற்படை (IN) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையுடன் (JMSDF) இணைந்து 7வது பதிப்பான ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சி 2023 (JIMEX 23)-யை ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடத்துகிறது.
  • JIMEX இன் இந்த பதிப்பு 2012 இல் தொடங்கப்பட்டு 11 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
  • JIMEX  23 இரு கடற்படையினரும் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும், செயல்பாட்டுத் தொடர்புகளை எளிதாக்குவதற்கும் வாய்ப்பபை வழங்குகிறது.

JIMEX  23 பற்றி

  • JIMEX  23 ஆனது ஆறு நாட்கள் மற்றும் இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது.

துறைமுகம் கட்டம் :

  • துறைமுக கட்டம் எனப்படும் ஆரம்ப கட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.
  • இந்த கட்டத்தில், பங்கேற்பாளர்கள் தொழில்முறை விவாதங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமூக தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.

கடல் கட்டம் :

  • இந்த கட்டம் திறந்த கடலில் நடத்தப்படும். இரு கடற்படைகளும் ஒத்துழைத்து தங்கள் போர் திறன்களை செம்மைப்படுத்த உதவும்.
  • பல ஒழுங்கு செயல்பாடுகள் மூலம் சிக்கலான மேற்பரப்பு, துணை மேற்பரப்பு மற்றும் காற்ற களங்களில் அவற்றின் இயங்குநிலையை மேம்படுத்துகிறது.

IN-USN தற்காப்பு மற்றும் வெடி ஆயுதங்களை அகற்றும் பயிற்சி (SALVEX)

  • இந்தியக் கடற்படை (IN) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) கடற்கடையின் (USN) கடல்சார் தற்காப்பு மற்றும் வெடி ஆயுதங்களை அகற்றும் (EOD) பயிற்சியின் 7வது பதிப்பு, கேரளாவின் கொச்சியில் நடத்தப்பட்டது.
  • நீர் மூழ்குதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நுட்பங்களில் அமெரிக்க மற்றும் இந்திய டைவர்ஸ் திறனை வலுப்படுத்தலை நோக்கமாக கொண்டுள்ளது.
  • முதன்முதலில் IN-USN SALVEX 2005 இல் நடத்தப்பட்டது.
  • SALVEX தொடர் பயிற்சிகள் ஆண்டுதோறும் இந்திய மற்றும் அமெரிக்க பசிபிக் இடங்களில் மாறி மாறி நடத்தப்படுகின்றன.

பங்கேற்பாளர்கள்:

  • இந்திய கடற்படை கப்பல் நீரிக்சாக் (INS) Nireekshak மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல் சால்வர் US Naval Ship (USNS) Salvor.
  • அத்துடன் சிறப்பு நீர் மூழ்குதல் மற்றும் EOD குழுக்கள் ஆகிய இரு கடற்படையினரும் கலந்துகொண்டனர்.
Next வரலாறு >

People also Read