வரலாறு

உலக சுற்றுலா தினம்நவம்பர் 27

  • உலகம் முழுவதும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கவும், பயணம் தொடர்பான வேடிக்கை மற்றும் மகிழ்ச்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினம் நவம்பர் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலகச் சுற்றுலா அமைப்பினால் 1979 முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2023 கருத்துரு:  “சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் என்பதாகும்.

பாதுகாப்பு

மூன்று நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களின் சேவை தொடக்கம்

  • இந்திய கடற்படைக்காக கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் எட்டு ASW கப்பல்களின் தொடரில் முதல் மூன்று கப்பல்களின் சேவை  தொடங்கப்பட்டது.
  • இந்த கப்பல்களுக்கு INS மாஹே, INS மல்வான் மற்றும் INS மங்ரோல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

COP-28 உச்சிமாநாடு  தொடக்கம்

  • COP 28 உச்சி மாநாடு துபாயில் நவம்பர் 30 முதல் 12 டிசம்பர் 2023 வரை நடைபெறுகிறது.
  • COP28 உச்சிமாநாட்டின் முதல் நாளில் இழப்பு மற்றும் சேத நிதி ஒதுக்கப்பட்டது.
  • இதன்மூலம்  கிட்டத்தட்ட $250 மில்லியன் டாலர் நிதியுதவி பெறப்பட உள்ளது . இந்த நிதியானது காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கையாளும் நாடுகளுக்கு ஈடுசெய்ய உதவும்.
  • அனைத்து வளரும் நாடுகளும் நிதியுதவி பெறுவதற்கு  விண்ணப்பிக்க தகுதியுடையவை மேலும் ஒவ்வொரு நாடும் அதில் பங்களிக்க அழைக்கப்பட்டிருக்கிறது.
Next Current Affairs வரலாறு >

People also Read