பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்
ஓபிசி ஆணையம்
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தொடர்பாக அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம், குடியரசுத்தலைவரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
- ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களை உள்பிரிவுகளாக வகைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தகுதிகள், அளவீடுகள் குறித்த பரிந்துரைகளை அளிக்கும் வகையில் தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜி.ரோகிணி தலைமையில் ஓபிசி ஆணையம் கடந்த 2017-இல் அமைக்கப்பட்டது.
- பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 13 முறை நீட்டிக்கப்பட்டது.
- இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ரோகிணி ஆணையத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டதாக மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே சமச்சீரற்ற முறையில் இடஒதுக்கீட்டின் பயன்கள் சென்றடைவது குறித்து ஆராய்வதையும் இந்த ஆணையம் முக்கியப் பணிகளாக கொண்டிருந்தது.
OBC கமிஷன்
- முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 1953 – காக்கா காலேல்கர்.
- இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 1979 – பி.பி. மண்டல்.
- இந்திரா சஹானி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கு, 1992.
- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC), 1993.
- 123வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2017.
- மசோதா ஆகஸ்ட் 2018 இல் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று, NCBC க்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது.
பிறப்பு, இறப்பு பதிவு மசோதா
- கல்வி நிறுவனங்கள், அரசு பணிகளில் சேருவது முதல், ஓட்டுனர் உரிமம் எடுப்பது வரையிலான அனைத்து விதமான அரசு சார்ந்த பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவின்படி, பள்ளி, கல்லுாரிகளில் சேருவது, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் வாங்குவது, அரசு வேலைகளில் சேருவது போன்றவற்றுக்கு பிறந்த ஊர் மற்றும் தேதிக்கான ஒரே ஆவணமாக, பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
- இந்த திருத்தத்தின் படி, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், இந்த பிறப்பு, இறப்பு தரவுகளை, சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.
- மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுக்கு அரசு பயன்படுத்த முடியும்.
- மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறையை இந்த மசோதா எளிதாக்குகிறது.
- மேலும், அனைத்து மருத்துவமனைகளும் இறப்பு குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை இந்த சட்ட திருத்தம் கட்டாயமாக்குகிறது.