அரசியல் அறிவியல்

அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய அரசியல் அமைப்புகள்

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது 

  • செப்டம்பர் 10 ஆம் தேதி ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்த குறுகிய காலத்திலேயே செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
  • அமர்வின் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் வெளியிடவில்லை.

பாராளுமன்ற அமர்வுகள் பற்றி

  • அரசியலமைப்பின் 85 வது பிரிவின் கீழ் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறுகிறது.
  • இந்திய குடியரசு தலைவரால் கூட்டப்படுகிறது (பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது)
  •  மரபுப்படி ஒரு வருடத்தில் மூன்று அமர்வுகள் பாராளுமன்றம் கூடுகிறது.
  •  பட்ஜெட் அமர்வு
  •  மழைக்கால அமர்வு
  •  குளிர்கால அமர்வு
  • பாராளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையிலான இடைவெளி 6 மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது

மக்கள் நலத்திட்டங்கள்

மக்கள்தொகை அடிப்படையில் நகரங்களுக்கு இ- பஸ்கள் ஒதுக்கப்படும்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு PM-eBus சேவா திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 10,000 மின்சார பேருந்துகள் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரே மாதிரியான முத்திரையைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான 169 நகரங்கள் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்படும் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மின் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படும்
  • 15 முதல் 20 லட்சம் வரை – 150 பேருந்துகள்
  • 10 முதல் 15 லட்சம் வரை – 100 பேருந்துகள்
  • ஐந்து முதல் 10 லட்சம் வரை – 100 பேருந்துகள்
  • ஐந்து லட்சத்திற்கும் குறைவு – 50 பேருந்துகள்

PM-eBus சேவா பற்றி

  • பொது-தனியார் கூட்டாண்மை (ppp) மாதிரியின் மூலம் 10,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது
  • பிரிவு அ: பெருநகர பேருந்து சேவைகள் (169 நகரங்கள்) 169 நகரங்களில் PPP மாதிரியில் 

10,000 இ-பஸ்கள் பயன்படுத்தப்படும்.

  • பிரிவு ஆ: பசுமை நகர்ப்புற நகர்வு முயற்சிகள் (181 நகரங்கள்)

181 நகரங்களில் பசுமை நகர்ப்புற நகர்வு முயற்சிகளின் கீழ் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

Next அரசியல் அறிவியல் >

People also Read