அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
- ஒலியின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் செல்லும் பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை அரபிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்தது.
- கப்பல், விமானம், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் நிலப் பகுதியிலிருந்து இலக்கைத் தாக்கி அழிக்கும், பிரமோஸ் ஏவுகணை, இந்திய – ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. இது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மார்ச் 7-ம் தேதி, மேகா – டிராபிக்ஸ்-1 (எம்டி1) செயலிழக்கச் செய்யப்பட்ட குறைந்த புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோளை கட்டுப்படுத்தி மீண்டும் நுழைவதற்கான சவாலான சோதனைக்கு தயாராகி வருகிறது.
- வெப்பமண்டல வானிலை மற்றும் காலநிலை ஆய்வுகளுக்காக ISRO மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றின் கூட்டு செயற்கைக்கோள் முயற்சியாக MT1 அக்டோபர் 12, 2011 அன்று ஏவப்பட்டது.
ஸ்கர்ப் டைபஸ் காய்ச்சல்
- உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- தலைவலி, இருமல், மூச்சு திணறல் போன்றவை இதன் அறிகுறிகள். ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் உண்டாகும் இந்நோய் உயிருக்கு ஆபத்தானதாகும். இத்தொற்று விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.