அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

கிரிப்டோபயோசிஸ்

  • சமீபத்தில் 46,000 ஆண்டுகளுக்கு முன்பு உறைந்திருந்த புழுவை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்துள்ளனர்.
  • கிரிப்டோபயோசிஸ் எனப்படும் செயலற்ற நிலையில் சைபீரியன் உறைபனி பகுதியில் 40 மீட்டர் (131.2 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்ட வட்டப்புழு ஒன்று உயிர்பிழைத்துள்ளது.

கிரிப்டோபயோசிஸ் பற்றி

  • கிரிப்டோபயோசிஸ் என்பது ஒரு உயிரினத்தின் வாழ்வதற்கான எந்த அறிகுறிகளும் அற்ற நிலை.
  • அதன் வளர்சிதை மாற்ற செயல்பாடு அரிதாகவே அளவிட முடிவதாக இருக்கும் அல்லது நின்றுவிடும்.
  • கிரிப்டோபயாடிக் நிலையில் உள்ள உயிரினங்கள் நீர் அல்லது ஆக்ஸிஜன் முழுமையாக இல்லாததைத் தாங்கும் மற்றும் அதிக வெப்பநிலை, அத்துடன் உறைபனி அல்லது மிகவும் உப்பு நிலைகளைத் தாங்கும் திறன் கொண்டதாகும். 
  • வளர்சிதை மாற்றம் என்பது வாழ்க்கையின் வரையறுக்கும் பண்பு என்பதால், கிரிப்டோபயோசிஸை ஒரு உயிரினத்தின் தற்காலிக மரணம் என்று அழைக்கலாம்..

செல்லில் இல்லா டி.என்.ஏ (Cell free DNA)

  • மனித உடலில், ஒரு மரபணுவில் உள்ள பெரும்பாலான டிஎன்ஏ, குறிப்பிட்ட புரதங்களின் உதவியுடன் செல்களுக்குள் சரியான வகையில் சிதைவடையாமல் பாதுகாப்பாக நிரம்பியுள்ளது.
  • இருப்பினும், டிஎன்ஏவின் சில துண்டுகள் அவற்றின் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு செல்லுக்கு வெளியே, உடல் திரவங்களில் உள்ளன.
  • நியூக்ளிக் அமிலங்களின் இந்த சிறிய துண்டுகள் செல்-ஃப்ரீ டிஎன்ஏ (cfDNA) என்று அறியப்படுகின்றன.
  • cfDNA என்பது உயிரணுக்களிலிருந்து வெளியிடப்படும் நியூக்ளிக் அமிலங்களின் சிறிய துணுக்குகளைக் குறிக்கிறது.
  • அவை பிளாஸ்மா, சிறுநீர் மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) என உடல் திரவங்களில் செல்லிற் வெளியே காணப்படும்.
  • எதிர்பாற்றல் குறைவு நோய்கள், புற்றுநோய் போன்ற நோயியல் நிலைமைகளின் கீழ் இரத்தத்தில் cfDNA அளவு அதிகரிக்கிறது.

cfDNA பயன்பாடு

  • கருவில் உள்ள மரபணு சார் பிரச்சனைகளை கண்டறிதல்.
  • புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயெதிர்ப்புத் திறனைக் கண்காணித்தல் மற்றும் பயோமார்க்கராகப் பயன்படுத்தலாம்.

Next அறிவியல் >

People also Read