வரலாறு

முக்கிய தினங்கள்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

  • இது புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனம் 1987 – இல் உலகளாவிய அனுசரிப்பு தினத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
  • முதல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31, 1988 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2023 இன் கருப்பொருள் ”எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல”.

குறிப்பு

  • சீனாவுக்கு அடுத்தபடியாக பீடி, சிகரெட் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

விருதுகள் மற்றும் கௌரவங்கள் 

57வது ஞானபீட விருது

  • புகழ்பெற்ற கொங்கனி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான தாமோதர் மௌசோ 57 வது ஞானபீட விருதை வென்றார்.
  • ஆண்டுதோறும் வழங்கப்படும் ஞானபீட விருது மிகப் பழமையான மற்றும் மிக உயர்ந்த இந்தியா இலக்கிய விருது.
  • இது பாரதிய ஞானபீட இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் வழங்கப்படுகிறது. இது புது தில்லியில் உள்ளது.
  • தாமோதர் மௌஸோவுக்கு 1983 இல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • இந்த இலக்கிய விருதை வென்ற முதல் கொங்கனி எழுத்தாளர் ரவீந்திர கெலேகர் (2006-இல்) ஆவார்.
  • அஸ்ஸாமி கவிஞர் நில்மணி பூகன் 56வது ஞானபீட விருதை வென்றார்.
  • பூகன் ஞானபீடத்தைப் பெற்ற மூன்றாவது அஸ்ஸாமி எழுத்தாளர் ஆவார்.
Next வரலாறு >

People also Read