Tag: இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்

பொருளாதாரம்

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் மாறும் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி  வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது. அதே நேரத்தில் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட நீண்ட கால கடன் பெற்றவர்கள் மாறும் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி விகிதத்துக்கு மாறிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. பணவீக்கம்:  2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவுப்பொருள்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வில் நிச்சயமற்றதன்மை நிலவுகிறது. பிராந்திய போர்ப்பதற்றம், பருவகால மாறுபாட்டால் விளைச்சல் பாதிப்பு போன்றவையும் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே, பணவீக்கம் சற்று அதிகரித்து 5.4 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை:  ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றதால் கூடுதலாக புழக்கத்தில் வந்துள்ள பணத்தை திரும்பப் பெற தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக வங்கிகள் தற்காலிக இருப்பு நிதியை (ICRR) 10 சதவீதம் உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  UPI பணப்பரிமாற்ற முறையில் செயற்கை நுண்ணறிவு (A.I.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழியில் அல்லாமல் UPI லைட் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.200-இல் இருந்து ரூ.500 ஆக, அதிகரிக்கப்பட்டுள்ளது. MPC பற்றி திருத்தப்பட்ட (2016 இல்) RBI சட்டம், 1934 இன் பிரிவு 45ZB இன் கீழ், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழுவை (MPC) அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பணவீக்க இலக்கை அடைய தேவையான கொள்கை விகிதத்தை பணவியல் கொள்கை குழு தீர்மானிக்கும். உறுப்பினர்கள்: (MPC 6 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்) ரிசர்வ் வங்கியின் ஆளுநர்(அதிகாரபூர்வ தலைவர்), பணவியல் கொள்கைக் குழுவின் பொறுப்பு துணை ஆளுநர், மத்திய வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் வங்கி அதிகாரி, மத்திய அரசால் நியமிக்கப்படும் மூன்று நபர்கள்.

பொருளாதாரம்

தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள் விலை கண்காணிப்பு பிரிவு (PMD) சமீபகாலமாக பல அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலை உயர்வு காரணமாக, முட்டை, தினை உள்ளிட்ட மேலும் 16 உணவுப் பொருட்களின் விலைகளை PMD கண்காணிக்க இருக்கிறது. தற்போது, தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகள் உட்பட 22 பொருட்களின் தினசரி விலைகளை PMD கண்காணிக்கிறது. PMD நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ளது. PMD தினசரி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகள் மற்றும் உடனடி மற்றும் எதிர்கால விலைகளை கண்காணிக்கிறது. விலைவாசி உயர்வின் போது நுகர்வோருக்கு தற்காலிக நிவாரணம் அளிக்க, பொருட்கள் சார்ந்த சந்தை தலையீட்டு திட்டங்களையும் இது செயல்படுத்துகிறது. இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் யுவானுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது கடந்த மூன்று மாதங்களில் சீன யுவானுக்கு எதிராக ரூபாய் மதிப்பு 6% உயர்ந்துள்ளது. சீனா கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சந்தையே திறந்தது, அமெரிக்காவில் அதிக வருமானம் மற்றும் பலவீனமான உலகளாவிய வளர்ச்சிக்கு மத்தியில் ஏற்றுமதிக்கான குறைவான தேவை ஆகியவை இதற்குக் காரணம். இந்தியாவிற்கு சாதகமான கூறுகள் இது சீனாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க வழிவகுக்கும். இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பொருட்கள் மலிவாக இருக்கும் என்பதால் முக்கிய பணவீக்கத்தை (உணவு மற்றும் ஆற்றல் தவிர்த்து) குறைக்க உதவலாம்.  

பொருளாதாரம்

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து Repo வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக ஆர்பிஐ நிர்ணயித்தது.  ரிவர்ஸ் ரெப்போ விகிதம் – 3.35% RBI பற்றி தலைமையகம் – மும்பை ஆளுநர் – சக்திகாந்த தாஸ் நிறுவப்பட்டது – 1 ஏப்ரல் 1935 குறியீடுகள் உணவு பாதுகாப்பு குறியீடு 2023 : கேரளா, பஞ்சாப் முன்னிலை, தமிழ்நாடு 3வது இடம்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) 5வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI), உலக உணவு தினத்தை முன்னிட்டு ஜுன் 7 ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் வெளியிடப்பட்டது. பெரிய மாநிலங்களில்: 2022-23 உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிறிய மாநிலங்களில்: தொடர்ந்து நான்காவது முறையாக கோவா முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகியவை உள்ளன. கடந்த ஆண்டும் இந்த மூன்று மாநிலங்களும் இதே நிலையில்தான் இருந்தன. யூனியன் பிரதேசங்களில்: ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.  கடந்த ஆண்டும் மூன்று யூனியன் பிரதேசங்களும் இதே நிலைகளை பெற்றிருந்தன. குறிப்பு 2021-22 ஆம் ஆண்டில் 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது, அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா இருந்தன. 2020-21ல் குஜராத் முதலிடத்திலும், கேரளாவை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் இருந்தது. மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு 2018-19 இல் தொடங்கப்பட்டது. குறிக்கோள் – நாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குதல். FSSAI என்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உறுதி செய்கிறது.