பொருளாதாரம்

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்

மாறும் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி 

  • வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது.
  • அதே நேரத்தில் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட நீண்ட கால கடன் பெற்றவர்கள் மாறும் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி விகிதத்துக்கு மாறிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

பணவீக்கம்: 

  • 2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில் உணவுப்பொருள்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வில் நிச்சயமற்றதன்மை நிலவுகிறது. பிராந்திய போர்ப்பதற்றம், பருவகால மாறுபாட்டால் விளைச்சல் பாதிப்பு போன்றவையும் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே, பணவீக்கம் சற்று அதிகரித்து 5.4 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை: 

  • ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றதால் கூடுதலாக புழக்கத்தில் வந்துள்ள பணத்தை திரும்பப் பெற தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக வங்கிகள் தற்காலிக இருப்பு நிதியை (ICRR) 10 சதவீதம் உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • UPI பணப்பரிமாற்ற முறையில் செயற்கை நுண்ணறிவு (A.I.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழியில் அல்லாமல் UPI லைட் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.200-இல் இருந்து ரூ.500 ஆக, அதிகரிக்கப்பட்டுள்ளது.

MPC பற்றி

  • திருத்தப்பட்ட (2016 இல்) RBI சட்டம், 1934 இன் பிரிவு 45ZB இன் கீழ், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழுவை (MPC) அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
  • பணவீக்க இலக்கை அடைய தேவையான கொள்கை விகிதத்தை பணவியல் கொள்கை குழு தீர்மானிக்கும்.

உறுப்பினர்கள்: (MPC 6 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்)

  • ரிசர்வ் வங்கியின் ஆளுநர்(அதிகாரபூர்வ தலைவர்),
  • பணவியல் கொள்கைக் குழுவின் பொறுப்பு துணை ஆளுநர்,
  • மத்திய வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் வங்கி அதிகாரி,
  • மத்திய அரசால் நியமிக்கப்படும் மூன்று நபர்கள்.
Next பொருளாதாரம் >

People also Read