Tag: உணவு பாதுகாப்பு குறியீடு 2023 : கேரளா

பொருளாதாரம்

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து Repo வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக ஆர்பிஐ நிர்ணயித்தது.  ரிவர்ஸ் ரெப்போ விகிதம் – 3.35% RBI பற்றி தலைமையகம் – மும்பை ஆளுநர் – சக்திகாந்த தாஸ் நிறுவப்பட்டது – 1 ஏப்ரல் 1935 குறியீடுகள் உணவு பாதுகாப்பு குறியீடு 2023 : கேரளா, பஞ்சாப் முன்னிலை, தமிழ்நாடு 3வது இடம்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) 5வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI), உலக உணவு தினத்தை முன்னிட்டு ஜுன் 7 ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் வெளியிடப்பட்டது. பெரிய மாநிலங்களில்: 2022-23 உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிறிய மாநிலங்களில்: தொடர்ந்து நான்காவது முறையாக கோவா முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகியவை உள்ளன. கடந்த ஆண்டும் இந்த மூன்று மாநிலங்களும் இதே நிலையில்தான் இருந்தன. யூனியன் பிரதேசங்களில்: ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.  கடந்த ஆண்டும் மூன்று யூனியன் பிரதேசங்களும் இதே நிலைகளை பெற்றிருந்தன. குறிப்பு 2021-22 ஆம் ஆண்டில் 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது, அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா இருந்தன. 2020-21ல் குஜராத் முதலிடத்திலும், கேரளாவை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் இருந்தது. மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு 2018-19 இல் தொடங்கப்பட்டது. குறிக்கோள் – நாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குதல். FSSAI என்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உறுதி செய்கிறது.