அரசியல் அறிவியல்

மக்கள் கருத்து

பொதுப்பெயர் மருந்துகளை பரிந்துரைக்கும் நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும்

  • ‘சந்தைக்கு வரும் அனைத்து மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை, பொதுப்பெயர் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று மத்திய அரசிடம் இந்திய மருத்துவ சங்கம் (IMA) வலியுறுத்தியுள்ளது.
  • மருத்துவர்களின் தொழில்முறை நடத்தைக்கான புதிய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டது.
  • அதில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பொதுப்பெயர் மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. மீறினால் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.
  • பொதுப்பெயர் மருந்துகளின் தரம் குறித்து நிச்சயமற்றதன்மை நிலவுவதே, அவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில் மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. 

மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்நத அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்

“விடியல் பயணம்“  திட்டம்

  • மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் இனிமேல் “விடியல் பயணம்“ என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ரூ.850-க்கு மேல் சேமிக்க முடிவதாக பெண்கள் கூறுகிறார்கள். 
  • பெண்களுக்குப் பொருளாதார விடியலை அளித்ததன் அடையாளமாக, கட்டணமில்லாத பேருந்து பயணத் திட்டம் இனி “விடியல் பயணம்“ என்று அழைக்கப்படும்.
Next அரசியல் அறிவியல் >

People also Read