பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
எல்லை சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும்
- எல்லையில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளித்து நாட்டைக் காக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
- எல்லையில் ரூ.724 கோடி மதிப்பில் 22 பாலங்கள் உள்பட 28 உள் கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் லடாக்கில் எட்டு, அருணாசல பிரதேசத்தில் ஐந்து, ஜம்மு-காஷ்மீரில் நான்கு, சிக்கிம், பஞ்சாப், உத்தரகண்டில் தலா தலா மூன்று, ராஜஸ்தானில் இரண்டு திட்டங்கள் அடங்கும்.
- கடந்த 2021இல் எல்லைச் சாலைகள் அமைப்பு 102 உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றியது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 28 திட்டங்களுடன் சேர்த்து 2022இல் 103 உள்ட்டமைப்புத் திட்டங்களை எல்லைச் சாலைகள் அமைப்பு நிறைவேற்றியது.
நியமனங்கள்
சுங்கத்துறை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்பு
- சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றார்.
- சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களும், சென்னை பயணிகள் விமான நிலையம், மீனம்பாக்கம் சரக்குகள் கையாளும் முனையம், உள்நாட்டு முனையங்களான கான்கார், உள்ளிட்டவை சென்னை மண்டல முதன்மை தலைமை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர் இதற்கு முன்பு புது தில்லியில் உள்ள நேரடி வரிகள் வாரியத்தில் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.