Tag: ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2023 (JIMEX 23)

வரலாறு

பாதுகாப்பு ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2023 (JIMEX 23) இந்தியா கடற்படை (IN) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையுடன் (JMSDF) இணைந்து 7வது பதிப்பான ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சி 2023 (JIMEX 23)-யை ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடத்துகிறது. JIMEX இன் இந்த பதிப்பு 2012 இல் தொடங்கப்பட்டு 11 ஆண்டு நிறைவடைந்துள்ளது. JIMEX  23 இரு கடற்படையினரும் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும், செயல்பாட்டுத் தொடர்புகளை எளிதாக்குவதற்கும் வாய்ப்பபை வழங்குகிறது. JIMEX  23 பற்றி JIMEX  23 ஆனது ஆறு நாட்கள் மற்றும் இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. துறைமுகம் கட்டம் : துறைமுக கட்டம் எனப்படும் ஆரம்ப கட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும். இந்த கட்டத்தில், பங்கேற்பாளர்கள் தொழில்முறை விவாதங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமூக தொடர்புகளில் ஈடுபடுவார்கள். கடல் கட்டம் : இந்த கட்டம் திறந்த கடலில் நடத்தப்படும். இரு கடற்படைகளும் ஒத்துழைத்து தங்கள் போர் திறன்களை செம்மைப்படுத்த உதவும். பல ஒழுங்கு செயல்பாடுகள் மூலம் சிக்கலான மேற்பரப்பு, துணை மேற்பரப்பு மற்றும் காற்ற களங்களில் அவற்றின் இயங்குநிலையை மேம்படுத்துகிறது. IN-USN தற்காப்பு மற்றும் வெடி ஆயுதங்களை அகற்றும் பயிற்சி (SALVEX) இந்தியக் கடற்படை (IN) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) கடற்கடையின் (USN) கடல்சார் தற்காப்பு மற்றும் வெடி ஆயுதங்களை அகற்றும் (EOD) பயிற்சியின் 7வது பதிப்பு, கேரளாவின் கொச்சியில் நடத்தப்பட்டது. நீர் மூழ்குதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நுட்பங்களில் அமெரிக்க மற்றும் இந்திய டைவர்ஸ் திறனை வலுப்படுத்தலை நோக்கமாக கொண்டுள்ளது. முதன்முதலில் IN-USN SALVEX 2005 இல் நடத்தப்பட்டது. SALVEX தொடர் பயிற்சிகள் ஆண்டுதோறும் இந்திய மற்றும் அமெரிக்க பசிபிக் இடங்களில் மாறி மாறி நடத்தப்படுகின்றன. பங்கேற்பாளர்கள்: இந்திய கடற்படை கப்பல் நீரிக்சாக் (INS) Nireekshak மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல் சால்வர் US Naval Ship (USNS) Salvor. அத்துடன் சிறப்பு நீர் மூழ்குதல் மற்றும் EOD குழுக்கள் ஆகிய இரு கடற்படையினரும் கலந்துகொண்டனர்.