Tag: உலக சுற்றுலா தினம்- நவம்பர் 27

வரலாறு

உலக சுற்றுலா தினம்- நவம்பர் 27 உலகம் முழுவதும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கவும், பயணம் தொடர்பான வேடிக்கை மற்றும் மகிழ்ச்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினம் நவம்பர் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகச் சுற்றுலா அமைப்பினால் 1979 முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 2023 கருத்துரு:  “சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்” என்பதாகும். பாதுகாப்பு மூன்று நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களின் சேவை தொடக்கம் இந்திய கடற்படைக்காக கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் எட்டு ASW கப்பல்களின் தொடரில் முதல் மூன்று கப்பல்களின் சேவை  தொடங்கப்பட்டது. இந்த கப்பல்களுக்கு INS மாஹே, INS மல்வான் மற்றும் INS மங்ரோல் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் COP-28 உச்சிமாநாடு  தொடக்கம் COP 28 உச்சி மாநாடு துபாயில் நவம்பர் 30 முதல் 12 டிசம்பர் 2023 வரை நடைபெறுகிறது. COP28 உச்சிமாநாட்டின் முதல் நாளில் இழப்பு மற்றும் சேத நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம்  கிட்டத்தட்ட $250 மில்லியன் டாலர் நிதியுதவி பெறப்பட உள்ளது . இந்த நிதியானது காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கையாளும் நாடுகளுக்கு ஈடுசெய்ய உதவும். அனைத்து வளரும் நாடுகளும் நிதியுதவி பெறுவதற்கு  விண்ணப்பிக்க தகுதியுடையவை மேலும் ஒவ்வொரு நாடும் அதில் பங்களிக்க அழைக்கப்பட்டிருக்கிறது.