இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கையால் ரூ.40,000 கோடி கூடுதல் ஜிஎஸ்டி வருவாய்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
- ஜெய்பூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்பாட்டு காலம் முடிந்த வாகனங்களை அழிக்கும் மையம்.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மோட்டார் வாகன உற்பத்தி துறையின் பங்களிப்பு 7.1 சதவீதமாக உள்ளது. மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடி.
- 4 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்.
- இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டுக்குள் 5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தி மையமாக இந்தியாவின் மதிப்பை ரூ.15 லட்சம் கோடி அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
நிதிப் பற்றாக்குறை இலக்கு 67.8 சதவீதத்தை எட்டியது
- அரசின் செலவினத்துக்கும் வருவாய்க்கும் இடையேயான வேறுபாடே நிதிப் பற்றாக்குறையாகும். செலவினத்தை சமாளிப்பதற்காக அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை அளவிடும் கருவியாகவும் நிதிப் பற்றாக்குறை உள்ளது.
- நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ரூ. 17.55 லட்சம் கோடிக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.4 சதவீதம் ஆகும்.
- இது ஒட்டுமொத்த இலக்கில் 67.8 சதவீதம் ஆகும்.