பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்

பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனையில் அவசரம் காட்டவில்லை

  • பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனி யாருக்கு விற்பதில் மத்திய அரசு அவசரம் காட்டவில்லை என்றும் நாட்டின் முக்கிய துறைகளின் நிறுவனங்களில் அரசு தொடர்ந்து பங்கு வகிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிப்பட தெரிவித்தார்.
  • அரசின் நிதி ஆதாயத்துக்காக முக்கியமற்ற துறைகளின் பொது நிறுவனப் பங்கு களை அரசு தனியார்மயப்படுத்துகிறது.  அதிலும் சுயமாக தனித்து இயங்கக் கூடிய பெரிய நிறுவனங்களைத் தவிர்த்து சிறிய அளவிலான அல்லது போட்டியில் நீடிக்க இயலாத நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். அத்தகைய சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களுடன் இணைத்து அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் சொத்துகள் பயனற்று இருப்பதைவிட பணமாக்குவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
  • அரசின் நிறுவனங்களின் பங்குகளைத் துறந்து ரூ.51000 கோடி வருவாயை ஈட்ட மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Next பொருளாதாரம் >

People also Read