பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்

வடகிழக்கு மாநிலங்களில் வரி வருவாய் அதிகரிப்பு

  • சிறப்பாகப் பணியாற்றிய மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் (சிபிஐசி) 29 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் விருதுகள் வழங்கும் விழா அஸ்ஸாமின் குவாஹாட்டியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். 
  • மாநில நிதி நிர்வாகம் குறித்து நடப்பாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட அறிக்கையின்படி, 8 வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த வரி வருவாய் 27.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்ததே ஒட்டு மொத்தவரி வருவாய் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
  • ஜிஎஸ்டி சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதற்கு ஒப்புதல் அளித்த முதல் மாநிலம் என்ற சிறப்பை அஸ்ஸாம் பெற்றது. ‘ஒரே நாடு, ஒரே வரி (ஜிஎஸ்டி) திட்டத்தின் கீழ் அஸ்ஸாமின் வரி வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. 

அசாம் பற்றி

  • ஆளுநர் – குலாப் சந்த் கட்டாரியா
  • முதல்வர் – ஹிமந்த பிஸ்வா சர்மா
  • தலைநகரம் – திஸ்பூர்
Next பொருளாதாரம் >

People also Read