Tag: வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை

பொருளாதாரம்

தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சனைகள் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை வெங்காயத்தின் உள்ளூர் விலைகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த 2024 மார்ச் 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (DGFT) தடை விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 19 அன்று மத்திய அரசானது, டிசம்பர் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு 40% வரி விதித்தது. தற்போதைய பொருளாதாரப் போக்குகள் நிதிக் கொள்கைக் குழு (MPC) சமீபத்தில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழு (MPC) பின்வரும் முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன. வட்டி விகிதங்களில் (ரெப்போரேட்) மாற்றாமில்லாமல் 6.5 சதவீதமாக தொடர்கிறது. 2023-24க்கான பொருளாதார  வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது . சராசரி பணவீக்க மதிப்பு 5.4% ஆக தொடர்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 வரை பணவீக்கம் அதிகரிக்கும் என நிதிக் கொள்கைக் குழு (MPC) எச்சரித்துள்ளது