Tag: வந்தே பாரத்  திட்டம்

தினசரி தேசிய நிகழ்வு

2023 -2024ல் உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்கும். 'உலகிற்கு இந்தியாவின் பால்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் இந்திய பால் சங்கம் (ஐடிஏ) ஏற்பாடு செய்த 49வது பால் தொழில் மாநாடு. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பால் துறை ஆண்டுதோறும் 6.6% வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு சுமார் 126 மில்லியன் லிட்டர் ஆகும், இது உலகிலேயே அதிகம். வந்தே பாரத்  திட்டம் இந்திய ரயில்வே தனது 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்த மாதம் தொடங்க உள்ளது. புதிய  அரை  அதிவேக ரயில் புது தில்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படும். இந்த ரயில் 2023 மார்ச் மூன்றாவது வாரத்தில்  அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் பற்றி: இது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எஞ்சின் இல்லாத அரை-அதிவேக ரயில் ஆகும். முன்னதாக, இது ரயில் 18 என்ற பெயரில் அறியப்பட்டது. இது சென்னை ICF ஆல் கட்டப்பட்டது. இந்த ரயில் 100% ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ்  உருவாக்கபட்டது.  இந்தியாவில் உள்ள நவீன லோகோமோட்டிவ் தொழிற்சாலைகள்: சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்- சித்தரஞ்சன். டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்-வாரணாசி. ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை - சென்னை. ரயில் பெட்டித் தொழிற்சாலை-கபுர்தலா. ரயில் சக்கர தொழிற்சாலை-பெங்களூரு.