தினசரி தேசிய நிகழ்வு

  • 2023 -2024ல் உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்கும்.
  • ‘உலகிற்கு இந்தியாவின் பால்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் இந்திய பால் சங்கம் (ஐடிஏ) ஏற்பாடு செய்த 49வது பால் தொழில் மாநாடு.
  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பால் துறை ஆண்டுதோறும் 6.6% வளர்ச்சி கண்டுள்ளது.
  • இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு சுமார் 126 மில்லியன் லிட்டர் ஆகும், இது உலகிலேயே அதிகம்.

வந்தே பாரத்  திட்டம்

  • இந்திய ரயில்வே தனது 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்த மாதம் தொடங்க உள்ளது.
  • புதிய  அரை  அதிவேக ரயில் புது தில்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படும்.
  • இந்த ரயில் 2023 மார்ச் மூன்றாவது வாரத்தில்  அறிமுகப்படுத்தப்படும்.

வந்தே பாரத் பற்றி:

  • இது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எஞ்சின் இல்லாத அரை-அதிவேக ரயில் ஆகும். முன்னதாக, இது ரயில் 18 என்ற பெயரில் அறியப்பட்டது.
  • இது சென்னை ICF ஆல் கட்டப்பட்டது.
  • இந்த ரயில் 100% ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ்  உருவாக்கபட்டது.

 இந்தியாவில் உள்ள நவீன லோகோமோட்டிவ் தொழிற்சாலைகள்:

  • சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்- சித்தரஞ்சன்.
  • டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்-வாரணாசி.
  • ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை – சென்னை.
  • ரயில் பெட்டித் தொழிற்சாலை-கபுர்தலா.
  • ரயில் சக்கர தொழிற்சாலை-பெங்களூரு.
Next தினசரி தேசிய நிகழ்வு >