Tag: முக்கிய அம்சங்கள்

தினசரி தேசிய நிகழ்வுகள்

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023(FTP 2023) இது ஏற்றுமதியாளர்களுடனான 'நம்பிக்கை' மற்றும் 'கூட்டாண்மை' கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. நோக்கங்கள்: 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வெளிப்புற ஏற்றுமதியை $2 டிரில்லியன் ஆக உயர்த்துதல், இந்திய ரூபாயை உலகளாவிய நாணயமாக்குதல் மற்றும் இ-காமர்ஸ் ஏற்றுமதிகளை ஊக்குவித்தல். முக்கிய அம்சங்கள் மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்ற முக்கியத்துவம்.                                                                                                               புதிய திறன்மிகு ஏற்றுமதி மையங்கள்-ஃபரீதாபாத், மொராதா பாத், மிர்ஸாபூர், வாரணாசி. மொத்த திறன்மிகு ஏற்றுமதி மையங்களின் எண்ணிக்கை-39. ஏற்றுமதியாளர்கள், மாநிலங்கள், மாவட்டங்கள். இந்தியத் தூதர கங்கள் இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல். பொருள்கள் மீதான ஏற்றுமதி வரியைக் குறைக்க நடவடிக்கை. வெளிநாட்டு வர்த்தகம் சார்ந்த விண்ணப்பங்கள் எண்மமயமாக்கப்படும். தானியங்கி முறையில் ஏற்றுமதி விண்ணப்பங்களுக்கான ஒப்புதல். இணையவழி வர்த்தக ஏற்றுமதி இலக்கு சுமார் ரூ.24 லட்சம் கோடி (2030-க்குள்). இணையவழி வர்த்தகத்துக்குக் கூடுதல் சலுகைகள். 'கூரியர்' சேவை மூலமான ஏற்றுமதி மதிப்பு வரம்பு ரூ.5 லட்சத் தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிப்பு. எதிர்காலத்துக்காகத் தயாராகும் நோக்கில் வர்த்தகத் துறை மறு கட்டமைப்பு செய்யப்படும்.