தினசரி தேசிய நிகழ்வுகள்

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023(FTP 2023)

  • இது ஏற்றுமதியாளர்களுடனான ‘நம்பிக்கை’ மற்றும் ‘கூட்டாண்மை’ கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

நோக்கங்கள்:

  • 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வெளிப்புற ஏற்றுமதியை $2 டிரில்லியன் ஆக உயர்த்துதல்,
  • இந்திய ரூபாயை உலகளாவிய நாணயமாக்குதல் மற்றும்
  • இ-காமர்ஸ் ஏற்றுமதிகளை ஊக்குவித்தல்.

முக்கிய அம்சங்கள்

  • மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்ற முக்கியத்துவம்.                                                                                                              
  • புதிய திறன்மிகு ஏற்றுமதி மையங்கள்-ஃபரீதாபாத், மொராதா பாத், மிர்ஸாபூர், வாரணாசி.
  • மொத்த திறன்மிகு ஏற்றுமதி மையங்களின் எண்ணிக்கை-39.
  • ஏற்றுமதியாளர்கள், மாநிலங்கள், மாவட்டங்கள். இந்தியத் தூதர கங்கள் இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்.
  • பொருள்கள் மீதான ஏற்றுமதி வரியைக் குறைக்க நடவடிக்கை.
  • வெளிநாட்டு வர்த்தகம் சார்ந்த விண்ணப்பங்கள் எண்மமயமாக்கப்படும்.
  • தானியங்கி முறையில் ஏற்றுமதி விண்ணப்பங்களுக்கான ஒப்புதல்.
  • இணையவழி வர்த்தக ஏற்றுமதி இலக்கு சுமார் ரூ.24 லட்சம் கோடி (2030-க்குள்).
  • இணையவழி வர்த்தகத்துக்குக் கூடுதல் சலுகைகள்.
  • ‘கூரியர்’ சேவை மூலமான ஏற்றுமதி மதிப்பு வரம்பு ரூ.5 லட்சத் தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிப்பு.
  • எதிர்காலத்துக்காகத் தயாராகும் நோக்கில் வர்த்தகத் துறை மறு கட்டமைப்பு செய்யப்படும்.
Next தினசரி தேசிய நிகழ்வு >