Tag: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – ஜுன் 26

வரலாறு

முக்கிய தினங்கள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – ஜுன் 26 2023 கருப்பொருள்: ”முதலில் மக்கள் :  களங்கத்தையும் பாகுபாட்டையும் நிறுத்துங்கள், தடுப்பை வலுப்படுத்துங்கள்”. விளையாட்டு சிறப்பு ஒலிம்பிக் 2023 2023 ஜுன் 17 முதல் 25 வரை, ஜெர்மனியின் பெர்லின், சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு 7,000 வீரர்களையும், சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த ஒருங்கிணைந்த பங்கேற்பாளர்களை 26 விளையாட்டுகளில் போட்டியிட வரவேற்கிறது. 2023 சிறப்பு ஒலிப்பிக்கில் இந்தியா 150 பதக்கங்களைக் கடந்தது. சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு 2023 இன் இறுதி நாளில் இந்திய அணி 157 பதக்கங்களை (தங்கம்: 66; வெள்ளி: 50; வெண்கலம்: 41) பெற்றுள்ளது. ஓபன் கோல்ப் போட்டி டிப்ஸ்போர்ட்ஸ் செக் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் வாகை சூடிய இந்தியாவின் தீக்ஷா தாகர், மகளிருக்கான ஐரோப்பிய டூர் போட்டிக்களில் தனது 2-ஆவது பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். விருதுகளும் கௌரவங்களும் பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயிரிய விருது எகிப்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ”ஆர்டர் ஆஃப் தி நைல்” விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி வழங்கி கௌரவித்தார். எகிப்து நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் ஈடு இணையற்ற சேவைகளை வழங்கும் நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், துணை அதிபர்கள் உள்ளிட்டோருக்கு ”ஆர்டர் ஆஃப் தி நைல்” விருதை எகிப்து வழங்கி வருகிறது. 1915-ஆம் ஆண்டு முதல் அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பு பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு. இது 13-ஆவது விருதாகும். கடந்த 9 ஆண்டுகளில் பப்புவா நியூ கினியா, ஃபிஜி, பலாவு குடியரசு, பூடான், அமெரிக்கா, பஹ்ரைனை், மாலத்தீவுகள், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். போர் நினைவிடத்தில் மரியாதை: முதலாம் உலகப்போரின் போது எகிப்து மற்றும் பாலஸ்தீனப்பகுதிகளில் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த சுமார் 4,000 இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். எகிப்து பற்றி ஜனாதிபதி - அப்தெல் ஃபத்தா எல்-சிசி பிரதமர் - முஸ்தபா கமால் மட்பௌலி தலைநகரம் - கெய்ரோ நாணயம் - எகிப்திய பவுண்ட்