வரலாறு

முக்கிய தினங்கள்

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – ஜுன் 26

  • 2023 கருப்பொருள்: ”முதலில் மக்கள் :  களங்கத்தையும் பாகுபாட்டையும் நிறுத்துங்கள், தடுப்பை வலுப்படுத்துங்கள்”.
    விளையாட்டு

    சிறப்பு ஒலிம்பிக் 2023

    • 2023 ஜுன் 17 முதல் 25 வரை, ஜெர்மனியின் பெர்லின்,

    சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு 7,000 வீரர்களையும்,

    சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த ஒருங்கிணைந்த

    பங்கேற்பாளர்களை 26 விளையாட்டுகளில்

    போட்டியிட வரவேற்கிறது.

    2023 சிறப்பு ஒலிப்பிக்கில் இந்தியா 150 பதக்கங்களைக் கடந்தது.

    • சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு 2023 இன் இறுதி நாளில் இந்திய அணி 157 பதக்கங்களை (தங்கம்: 66; வெள்ளி: 50; வெண்கலம்: 41) பெற்றுள்ளது.

    ஓபன் கோல்ப் போட்டி

    • டிப்ஸ்போர்ட்ஸ் செக் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் வாகை சூடிய இந்தியாவின் தீக்ஷா தாகர், மகளிருக்கான ஐரோப்பிய டூர் போட்டிக்களில் தனது 2-ஆவது பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார்.

    விருதுகளும் கௌரவங்களும்

    பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயிரிய விருது

    • எகிப்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ”ஆர்டர் ஆஃப் தி நைல்” விருது வழங்கப்பட்டுள்ளது.
    • அந்த விருதை பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி வழங்கி கௌரவித்தார்.
    • எகிப்து நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் ஈடு இணையற்ற சேவைகளை வழங்கும் நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், துணை அதிபர்கள் உள்ளிட்டோருக்கு ”ஆர்டர் ஆஃப் தி நைல்” விருதை எகிப்து வழங்கி வருகிறது.
    • 1915-ஆம் ஆண்டு முதல் அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பு

      • பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு. இது 13-ஆவது விருதாகும்.
      • கடந்த 9 ஆண்டுகளில் பப்புவா நியூ கினியா, ஃபிஜி, பலாவு குடியரசு, பூடான், அமெரிக்கா, பஹ்ரைனை், மாலத்தீவுகள், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
    • போர் நினைவிடத்தில் மரியாதை:
    • முதலாம் உலகப்போரின் போது எகிப்து மற்றும் பாலஸ்தீனப்பகுதிகளில் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த சுமார் 4,000 இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    எகிப்து பற்றி

    • ஜனாதிபதி – அப்தெல் ஃபத்தா எல்-சிசி
    • பிரதமர் – முஸ்தபா கமால் மட்பௌலி
    • தலைநகரம் – கெய்ரோ
    • நாணயம் – எகிப்திய பவுண்ட்
Next வரலாறு >

People also Read