Tag: பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம்

அரசியல்

அரசு நலத்திட்டங்கள் பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் தனியாக இரவு பயணிக்கும் பெண்களை அழைத்துச் செல்ல ரோந்து வாகனம். தமிழக காவல் துறை புதிய திட்டம் தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. தமிழக காவல் துறை பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை பெண்கள் தனியாக பயணிக்கும்போது பாதுகாப்பு குறைவு என நினைத்தால் காவல் துறையை உதவி எண்கள் மூலம் அழைக்கலாம். உதவி எண்களில் பேசும் காவலரிடம் பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறி, அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தால், அருகே உள்ள காவல் ரோந்து வாகனம் அனுப்பி வைக்கப்படும். இந்த வாகனம், பெண்கள் இருக்கும் இடத்துக்குகே வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். இந்த சேவையை 1091, 112 என்ற இலவச தொலைபேசி எண்கள் மூலமாகவும், 044-23452365, 044-28447701 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம்.