அரசியல்

அரசு நலத்திட்டங்கள்

பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம்

  • தனியாக இரவு பயணிக்கும் பெண்களை அழைத்துச் செல்ல ரோந்து வாகனம். தமிழக காவல் துறை புதிய திட்டம்
  • தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
  • தமிழக காவல் துறை பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • அதன்படி, மாநிலத்தில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை பெண்கள் தனியாக பயணிக்கும்போது பாதுகாப்பு குறைவு என நினைத்தால் காவல் துறையை உதவி எண்கள் மூலம் அழைக்கலாம்.
  • உதவி எண்களில் பேசும் காவலரிடம் பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறி, அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தால், அருகே உள்ள காவல் ரோந்து வாகனம் அனுப்பி வைக்கப்படும்.
  • இந்த வாகனம், பெண்கள் இருக்கும் இடத்துக்குகே வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.
  • இந்த சேவையை 1091, 112 என்ற இலவச தொலைபேசி எண்கள் மூலமாகவும், 044-23452365, 044-28447701 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
Next அரசியல் >