Tag: புதிய பொருளாதாரக் கொள்கைகள்

பொருளாதாரம்

புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அரசு துறை 'என் ரசீது என் அதிகாரம்' GST பரிசுத்தொகை திட்டம் 'Mera Bill Mera Adhikar' என்ற ரசீது ஊக்கத்தொகை திட்டத்தை அரசு தொடங்கியது. ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர் 1 முதல் தொடங்கவுள்ள இத்திட்டம் ì 10,000 முதல் ì  1 கோடி வரை ரொக்கப் பரிசை வழங்கும். நோக்கம் - வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு உரிய ரசீதைக் கேட்டுப் பெறுவதை ஊக்கப்படுத்துதல். குறிக்கோள் வணிகத்திலிருந்து நுகர்வோருக்கு (B2C) பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கும் போது, விற்பனையாளரிடமிருந்து சரியான ரசீதினை கேட்க குடிமக்கள் மற்றும் நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசாம், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்கள்; மற்றும் புதுச்சேரி, டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது. செயலியை அறிமுகப்படுத்தியது - மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) தகுதி நிபந்தனைகள் நுகர்வோருக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) பதிவு செய்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைத்து ரசீதுகளும். குலுக்கல் முறையில் பரிசீலிக்கப்படும் ரசீதின் குறைந்தபட்ச விலைபட்டியல் மதிப்பு 200 ஆகும். செப்டம்பர் 1 முதல் ஒரு மாதத்தில் தனிநபர்கள் அதிகபட்சம் 25 ரசீது வரை பதிவேற்றலாம். பதிவேற்றப்பட்ட ரசீதில் விற்பனையாளரின் GSTIN, ரசீது எண், செலுத்தப்பட்ட தொகை மற்றும் வரித்தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

பொருளாதாரம்

புதிய பொருளாதாரக் கொள்கைகள் டாலர் அற்ற பொருளாதாரம் பங்களாதேஷ் மற்றும் இந்தியா வர்த்தக பரிவர்த்தனையை ரூபாயில் தொடங்கின. இது டாலர் மதிப்பை நீக்குவதற்கான ஒரு படியாகும். டாலர் அற்ற பொருளாதாரம் (De-Dollarization) என்பது அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைத்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார இருப்புக்களை தங்கள் சொந்த நாணயம் அல்லது மாற்று வளங்களில் முன்னேற்றுவதைக் குறிக்கிறது. இது பிராந்திய நாணயம் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தும். மேலும், இரு நாடுகளும் படிப்படியாக வங்காளதேச நாணயமான ”டாக்கா”வை வர்த்தகத்திற்காக ஏற்றுக்கொள்ளும். சந்தை தேவை மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள வங்கிகளுக்கு ஏற்ப மாற்று விகிதம் நிர்ணயிக்கப்படும். ரூபாயின் சர்வதேசமயமாக்கல் பற்றி இது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் உள்ளுர் நாணயத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். இது உலகளாவிய சந்தைகளில் நாணயத்தின் ஏற்றுக்கொள்ளல், பணப்புழக்கம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. ரூபாயில் சர்வதேச வர்த்தக தீர்வை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஜுலை 2022 இல் ரிசர்வ் வங்கி, விலைப்பட்டியல், பணம் செலுத்துதல் மற்றும் ஏற்றுமதி/ இறக்குமதிகளுக்கு ரூபாய் பயன்படுத்த கூடுதல் ஏற்பாட்டை வழங்கியது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, 2022 டிசம்பரில், இந்தியா தனது முதல் வெளிநாட்டு ரூபாய் வர்த்தகத்தை ரஷ்யாவுடன் கண்டது. இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 19 நாடுகளில் உள்ள வங்கிகள் ரூபாய் மதிப்பில் செட்டில்மென்ட் செய்ய அனுமதிக்கப்பட்டன. ரூபாய் சர்வதேசமயமாக்கலின் நன்மைகள் இந்திய வணிகங்களுக்கான நாணய அபாயத்தைக் குறைக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு வைத்திருப்பதற்கான தேவையை குறைக்கிறது. வெளிநாட்டு நாணயத்தை சார்ந்திருப்பதை குறைக்கிறது.

பொருளாதாரம்

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அந்தார்த்ரிஷ்தி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் “அந்தார்த்ரிஷ்தி” என்ற பெயரில் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான தளத்தை (Dashboard) வெளியிட்டார். அந்தார்த்ரிஷ்தி பற்றி: உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான வளர்ச்சியை மதிப்பிடவும் கண்காணிக்கவும் தொடர்புடைய தரவைப் பதிவுசெய்வதன் மூலம் தேவையான தகவலை இந்த அமைப்பு வழங்குகிறது. ஹிந்தியில் “அந்தார்த்ரிஷ்தி” என்றால் ”நுண்ணறிவு” என்று பொருள். உள்ளடக்கிய பொருளாதாரம்: நோக்கம் – பொருத்தமான பொருளாதார ஏற்பாடுகள் மூலம் சேமிப்பு கணக்குகள், கடன், காப்பீடு மற்றும் கட்டண முறைகள் போன்ற சேவைகளை எளிய முறையில் அணுகுதல். உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீடு: நிதி உள்ளடக்கத்தின் அளவை அளவிடுவதற்கு ரிசர்வ் வங்கி 2021 ஆம் ஆண்டில் உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீட்டை (FI Index) உருவாக்கியது. உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீடு 3 அளவுருக்களைக் கொண்டுள்ளது. அவை அணுகல் (35%), பயன்பாடு (45%), மற்றும் தரம் (20%). உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீடு வங்கி, முதலீடுகள், காப்பீடு, அஞ்சல் மற்றும் ஓய்வூதியத் துறையின் விவரங்களை அரசு மற்றும் அந்தந்த துறை கட்டுப்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்து இயங்குகிறது. RBI பற்றி: கவர்னர் – சக்திகாந்த தாஸ் தலைமையகம் – மும்பை, மகாராஷ்டிரா நிறுவப்பட்டது – 1 ஏப்ரல் 1935