பொருளாதாரம்

புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அரசு துறை

‘என் ரசீது என் அதிகாரம்’ GST பரிசுத்தொகை திட்டம்

  • ‘Mera Bill Mera Adhikar’ என்ற ரசீது ஊக்கத்தொகை திட்டத்தை அரசு தொடங்கியது.
  • ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர் 1 முதல் தொடங்கவுள்ள இத்திட்டம்
    ì 10,000 முதல் ì  1 கோடி வரை ரொக்கப் பரிசை வழங்கும்.
  • நோக்கம் – வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு உரிய ரசீதைக் கேட்டுப் பெறுவதை ஊக்கப்படுத்துதல்.

குறிக்கோள்

    • வணிகத்திலிருந்து நுகர்வோருக்கு (B2C) பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கும் போது, விற்பனையாளரிடமிருந்து சரியான ரசீதினை கேட்க குடிமக்கள் மற்றும் நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • அசாம், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்கள்; மற்றும் புதுச்சேரி, டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது.
  • செயலியை அறிமுகப்படுத்தியது – மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC)

தகுதி நிபந்தனைகள்

  • நுகர்வோருக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) பதிவு செய்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைத்து ரசீதுகளும்.
  • குலுக்கல் முறையில் பரிசீலிக்கப்படும் ரசீதின் குறைந்தபட்ச விலைபட்டியல் மதிப்பு 200 ஆகும்.
  • செப்டம்பர் 1 முதல் ஒரு மாதத்தில் தனிநபர்கள் அதிகபட்சம் 25 ரசீது வரை பதிவேற்றலாம்.
  • பதிவேற்றப்பட்ட ரசீதில் விற்பனையாளரின் GSTIN, ரசீது எண், செலுத்தப்பட்ட தொகை மற்றும் வரித்தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
Next பொருளாதாரம் >

People also Read