பொருளாதாரம்

புதிய பொருளாதாரக் கொள்கைகள்

அந்தார்த்ரிஷ்தி

  • இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் “அந்தார்த்ரிஷ்தி” என்ற பெயரில் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான தளத்தை (Dashboard) வெளியிட்டார்.

அந்தார்த்ரிஷ்தி பற்றி:

  • உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான வளர்ச்சியை மதிப்பிடவும் கண்காணிக்கவும் தொடர்புடைய தரவைப் பதிவுசெய்வதன் மூலம் தேவையான தகவலை இந்த அமைப்பு வழங்குகிறது.
  • ஹிந்தியில் “அந்தார்த்ரிஷ்தி” என்றால் ”நுண்ணறிவு” என்று பொருள்.

உள்ளடக்கிய பொருளாதாரம்:

  • நோக்கம் – பொருத்தமான பொருளாதார ஏற்பாடுகள் மூலம் சேமிப்பு கணக்குகள், கடன், காப்பீடு மற்றும் கட்டண முறைகள் போன்ற சேவைகளை எளிய முறையில் அணுகுதல்.

உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீடு:

  • நிதி உள்ளடக்கத்தின் அளவை அளவிடுவதற்கு ரிசர்வ் வங்கி 2021 ஆம் ஆண்டில் உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீட்டை (FI Index) உருவாக்கியது.
  • உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீடு 3 அளவுருக்களைக் கொண்டுள்ளது. அவை அணுகல் (35%), பயன்பாடு (45%), மற்றும் தரம் (20%).
  • உள்ளடக்கிய பொருளாதாரக் குறியீடு வங்கி, முதலீடுகள், காப்பீடு, அஞ்சல் மற்றும் ஓய்வூதியத் துறையின் விவரங்களை அரசு மற்றும் அந்தந்த துறை கட்டுப்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்து இயங்குகிறது.

RBI பற்றி:

  • கவர்னர் – சக்திகாந்த தாஸ்
  • தலைமையகம் – மும்பை, மகாராஷ்டிரா
  • நிறுவப்பட்டது – 1 ஏப்ரல் 1935
Next பொருளாதாரம் >

People also Read