Tag: புகழ்பெற்ற நபர்கள்

வரலாறு

புகழ்பெற்ற நபர்கள் தியாகி சங்கரலிங்கனார் 1956ல் காங்கிரஸ் தலைவர் கே.பி.சங்கரலிங்கம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்பது அவரது கோரிக்கைகளில் ஒன்று. சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், இதன் விளைவாக அக்டோபர் 13, 1956 இல் அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரலிங்கனாரின் மரணம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான போராட்டத்தை மேலும் தூண்டியது. அதன் விளைவு ஜுலை 18, 1967 அன்று மாநில சட்டபேரவையில் முதல்வர் அண்ணாதுரை ஒரு தீர்மானத்தை தயாரித்தார். தமிழ்நாடு என்ற பெயர் ஒருமனதாக ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுபெயரிடுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்பட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முறையே நவம்பர் மற்றும் டிசம்பர் 1968 இல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தன. பின்னர் மாநில அரசு ஜனவரி 14, 1969 அன்று பெயர் மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வர அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது. விளையாட்டு சாத்விக் புதிய சாதனை இந்திய பாட்மின்டன் வீரர் சாத்விக்சாய் ராஜ் மணிக்கு 565 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்மாஷ் விளாசி புதிய ”கின்னஸ்“ உலக சாதனை படைத்திருக்கிறார். போட்டியில் அல்லாமல் சாதனை முயற்சிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட சூழலில் அவர் இந்த சாதனையை எட்டியிருக்கிறார். ஜப்பானின் சாய்டாமா நகரில், விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான யோனெக்ஸின் உற்பத்தி தொழிற்சாலை விளையாட்டரங்கில் இந்த உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரிகள் அங்கீரித்துள்ளனர். விருதுகளும் கௌரவங்களும் சர்வதேச எனி விருது மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-M) வேதியியல் துறைப் பேராசிரியரான T. பிரதீப் சர்வதேச எனி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது இத்தாலிய எரிசக்தி நிறுவனமான எனி நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இது நீரிலிருந்து நச்சு அசுத்தங்களை அகற்றுவதற்கான நிலையான மற்றும் மலிவு நானோ அளவிலான பொருள் பற்றிய அவரது பணிக்கான அங்கீகாரமாகும். கடந்த காலத்தில் இவ்விருதை சில நோபல் பரிசு பெற்றவர்களும் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.என்.ஆர்.ராவ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.