வரலாறு

புகழ்பெற்ற நபர்கள்

தியாகி சங்கரலிங்கனார்

  • 1956ல் காங்கிரஸ் தலைவர் கே.பி.சங்கரலிங்கம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்பது அவரது கோரிக்கைகளில் ஒன்று.
  • சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், இதன் விளைவாக அக்டோபர் 13, 1956 இல் அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரலிங்கனாரின் மரணம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான போராட்டத்தை மேலும் தூண்டியது.

அதன் விளைவு

  • ஜுலை 18, 1967 அன்று மாநில சட்டபேரவையில் முதல்வர் அண்ணாதுரை ஒரு தீர்மானத்தை தயாரித்தார். தமிழ்நாடு என்ற பெயர் ஒருமனதாக ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • மறுபெயரிடுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்பட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முறையே நவம்பர் மற்றும் டிசம்பர் 1968 இல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தன.
  • பின்னர் மாநில அரசு ஜனவரி 14, 1969 அன்று பெயர் மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வர அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.

விளையாட்டு

சாத்விக் புதிய சாதனை

  • இந்திய பாட்மின்டன் வீரர் சாத்விக்சாய் ராஜ் மணிக்கு 565 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்மாஷ் விளாசி புதிய ”கின்னஸ்“ உலக சாதனை படைத்திருக்கிறார்.
  • போட்டியில் அல்லாமல் சாதனை முயற்சிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட சூழலில் அவர் இந்த சாதனையை எட்டியிருக்கிறார். ஜப்பானின் சாய்டாமா நகரில், விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான யோனெக்ஸின் உற்பத்தி தொழிற்சாலை விளையாட்டரங்கில் இந்த உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரிகள் அங்கீரித்துள்ளனர்.

விருதுகளும் கௌரவங்களும்

சர்வதேச எனி விருது

  • மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-M) வேதியியல் துறைப் பேராசிரியரான T. பிரதீப் சர்வதேச எனி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த விருது இத்தாலிய எரிசக்தி நிறுவனமான எனி நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இது நீரிலிருந்து நச்சு அசுத்தங்களை அகற்றுவதற்கான நிலையான மற்றும் மலிவு நானோ அளவிலான பொருள் பற்றிய அவரது பணிக்கான அங்கீகாரமாகும்.
  • கடந்த காலத்தில் இவ்விருதை சில நோபல் பரிசு பெற்றவர்களும் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.என்.ஆர்.ராவ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next வரலாறு >

People also Read