பிரளய் ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணை, ஒடிஸா மாநிலம் சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரளய் என்பது தரையிலிருந்து தரையை தாக்கும் குறுகிய தொலைவு அதிநவீன ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையை டிஆர்டிஓ (DRDO) உருவாக்கியுள்ளது. இது 1,000 கிலோ வரை வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது, 500 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் இந்த ஏவுகணைக்கு உள்ளது.

