Tag: தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்

பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) முதலிடம் பெற்றுள்ளது. நாட்டில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசையை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 8-ஆவது ஆண்டாக அந்தத் தரவரிசையை கல்வி அமைச்சகம் வெளியிட்டது. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த பிரிவின் கீழ் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. ஒட்டு மொத்த பிரிவில் மட்டுமின்றி, தேசிய அளவிலான சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பட்டியலிலும் சென்னை ஐஐடி 8-ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவு மற்றம் புத்தாக்க நிறுவனங்கள் பிரிவின் கீழ் 2-ஆம் இடத்தை சென்னை ஐஐடி பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகம் – ஆராய்ச்சி நிறுவனத்துக்கான பட்டியலில் பெங்களுரு இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) முதலிடம் வகித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்தையும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் இதே பல்கலைக்கழகங்களே முதல் 3 இடங்களையும் பிடித்திருத்தன. NIRF பற்றி தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF), மனித வள மேம்பாட்டு அமைச்சரால் 2015-இல் MHRD-ஆல் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்கான வழிமுறையை காட்டுகிறது. தரவரிசைகான அளவுருக்கள் கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், பட்டதாரிகள் வெளியேற்றம் மற்றும் உள்ளடக்க எல்லை மற்றும் உணர்தல்.