பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்

    • மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) முதலிடம் பெற்றுள்ளது.
    • நாட்டில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசையை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 8-ஆவது ஆண்டாக அந்தத் தரவரிசையை கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
  • சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த பிரிவின் கீழ் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
  • ஒட்டு மொத்த பிரிவில் மட்டுமின்றி, தேசிய அளவிலான சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பட்டியலிலும் சென்னை ஐஐடி 8-ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவு மற்றம் புத்தாக்க நிறுவனங்கள் பிரிவின் கீழ் 2-ஆம் இடத்தை சென்னை ஐஐடி பிடித்துள்ளது.
  • சிறந்த பல்கலைக்கழகம் – ஆராய்ச்சி நிறுவனத்துக்கான பட்டியலில் பெங்களுரு இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) முதலிடம் வகித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்தையும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் இதே பல்கலைக்கழகங்களே முதல் 3 இடங்களையும் பிடித்திருத்தன.

NIRF பற்றி

  • தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF), மனித வள மேம்பாட்டு அமைச்சரால் 2015-இல் MHRD-ஆல் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
  • இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்கான வழிமுறையை காட்டுகிறது.

தரவரிசைகான அளவுருக்கள்

  • கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், பட்டதாரிகள் வெளியேற்றம் மற்றும் உள்ளடக்க எல்லை மற்றும் உணர்தல்.
Next பொருளாதாரம் >