முன்முயற்சிகள் /திட்டங்கள் வடசென்னை வளர்ச்சிக் திட்டம் பின்னணி : திட்டத்தின் வடசென்னை வளர்ச்சிக் கீழ் சிஎம்டிஏ சார்பில், ரூ.53 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம், பேருந்து நிலையம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை துணை முதல்வர் திறந்துவைத்தார். வடசென்னை வளர்ச்சிக் திட்டம் இத்திட்டம் தமிழ்நாட்டின் வட சென்னை பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்காக 3 ஆண்டுகளில் (2023-26) ₹1,000 கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டமாகும். இத்திட்டம் சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம், விளையாட்டு, வீடுகள் மற்றும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு கொள்கை மற்றும் ஆளுகை அனுபவக் கற்றல் மையம் (TNPAGE) பின்னணி : சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் சிங்கார சென்னை 2.0 நிதியில் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் சார்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு கொள்கை மற்றும் ஆளுகை அனுபவக் கற்றல் மையம் (TNPAGE) திறந்து வைக்கப்பட்டது. TNPAGE என்பது இந்தியாவில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆளுகை அனுபவக் கற்றல் மையமாகும். இது அரசின் கொள்கைகள், வளர்ச்சிக் குறியீடுகள் மற்றும் ஆளுகை முடிவுகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், மெய்நிகர் அனுபவமாகவும் வழங்கும் ஒரு பொது அறிவுத் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

