தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சிகள் /திட்டங்கள் 

வடசென்னை வளர்ச்சிக் திட்டம்

  • பின்னணி : திட்டத்தின் வடசென்னை வளர்ச்சிக் கீழ் சிஎம்டிஏ சார்பில், ரூ.53 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம், பேருந்து நிலையம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை துணை முதல்வர் திறந்துவைத்தார்.

வடசென்னை வளர்ச்சிக் திட்டம்

  • இத்திட்டம் தமிழ்நாட்டின் வட சென்னை பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்காக 3 ஆண்டுகளில் (2023-26) 1,000 கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டமாகும். 
  • இத்திட்டம் சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம், விளையாட்டு, வீடுகள் மற்றும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு கொள்கை மற்றும் ஆளுகை அனுபவக் கற்றல் மையம் (TNPAGE)

  • பின்னணி : சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் சிங்கார சென்னை 2.0 நிதியில் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் சார்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு கொள்கை மற்றும் ஆளுகை அனுபவக் கற்றல் மையம் (TNPAGE) திறந்து வைக்கப்பட்டது.
  • TNPAGE என்பது இந்தியாவில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆளுகை அனுபவக் கற்றல் மையமாகும். 
  • இது அரசின் கொள்கைகள், வளர்ச்சிக் குறியீடுகள் மற்றும் ஆளுகை முடிவுகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், மெய்நிகர் அனுபவமாகவும் வழங்கும் ஒரு பொது அறிவுத் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >