Tag: தங்கப் பதக்கம் வென்றவர்கள்

வரலாறு

முக்கிய தினங்கள் உலக சர்வதேச நீதி தினம் – ஜுலை 17 2022 கருப்பொருள் – ”முறையான வேலைவாய்ப்பு மூலம் சமூக நீதியை அடைதல்”. விளையாட்டு 2023 விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் மூன்றாவதான விம்பிள்டன் போட்டி லண்டன்,  இங்கிலாந்து மைதானத்தில் நடைபெற்றது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்யைர் பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செக்.குடியரசின் மார்கெட்டா வோண்டுரோஸோவா. இதன் மூலம் 60 ஆண்டுகளில் தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மார்கெட்டா வோண்டுரோஸோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் இதுவாகும். விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் இளம் வீரரும், உலகின் நம்பர் 1 இடத்தில் இருப்பவருவான கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். 2022 அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை முத்தமிட்ட அல்கராஸ், தற்போது அடுத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்து போட்டியை நிறைவு செய்தது. ஆசிய சாம்பியன் ஷிப்பில் இந்தியா கடந்த 2017-இல் (புவனேசுவரம்) 27 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அதை சமன் செய்துள்ளனர் இந்திய போட்டியாளர்கள். ஜப்பான் 37 பதக்கங்களுடன் (16, 11, 10) முதலிடத்தையும், சீனா 22 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தையும் (8, 8, 6) பிடித்தன. தங்கப் பதக்கம் வென்றவர்கள் ஜோதி யர்ராஜி – பெண்கள் 100 மீ தடை ஓட்டம் அப்துல்லா பூபக்கர் – ஆண்கள் மும்முறை தாண்டுதல் பருல் சவுத்ரி – பெண்கள் 3000 மீ அஜய் குமார் சரோஜ் – ஆண்கள் 1500 மீ தஜிந்தர்பால் சிங் தூர் – ஆண்கள் குண்டு எறிதல் கலப்பு 4 × 400 மீ ரிலே அணி