வரலாறு

முக்கிய தினங்கள்

உலக சர்வதேச நீதி தினம் – ஜுலை 17

  • 2022 கருப்பொருள் – ”முறையான வேலைவாய்ப்பு மூலம் சமூக நீதியை அடைதல்”.

விளையாட்டு

2023 விம்பிள்டன் டென்னிஸ்

  • கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் மூன்றாவதான விம்பிள்டன் போட்டி லண்டன்,  இங்கிலாந்து மைதானத்தில் நடைபெற்றது.
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்யைர் பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செக்.குடியரசின் மார்கெட்டா வோண்டுரோஸோவா. இதன் மூலம் 60 ஆண்டுகளில் தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
  • மார்கெட்டா வோண்டுரோஸோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் இதுவாகும்.
  • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் இளம் வீரரும், உலகின் நம்பர் 1 இடத்தில் இருப்பவருவான கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • 2022 அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை முத்தமிட்ட அல்கராஸ், தற்போது அடுத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்

  • தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்து போட்டியை நிறைவு செய்தது.
  • ஆசிய சாம்பியன் ஷிப்பில் இந்தியா கடந்த 2017-இல் (புவனேசுவரம்) 27 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அதை சமன் செய்துள்ளனர் இந்திய போட்டியாளர்கள்.
  • ஜப்பான் 37 பதக்கங்களுடன் (16, 11, 10) முதலிடத்தையும், சீனா 22 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தையும் (8, 8, 6) பிடித்தன.

தங்கப் பதக்கம் வென்றவர்கள்

  1. ஜோதி யர்ராஜி – பெண்கள் 100 மீ தடை ஓட்டம்
  2. அப்துல்லா பூபக்கர் – ஆண்கள் மும்முறை தாண்டுதல்
  3. பருல் சவுத்ரி – பெண்கள் 3000 மீ
  4. அஜய் குமார் சரோஜ் – ஆண்கள் 1500 மீ
  5. தஜிந்தர்பால் சிங் தூர் – ஆண்கள் குண்டு எறிதல்
  6. கலப்பு 4 × 400 மீ ரிலே அணி
Next வரலாறு >