Tag: டெலி மனஸ் (Tele MANAS) உதவி எண்

அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள் டெலி மனஸ் (Tele MANAS) உதவி எண் தேசிய தொலைநிலை - மனநலத் திட்டம் டெலி மனஸ்ஸின் மாவட்ட மனநலத் திட்டத்தின் மின்னணு பிரிவானது அக்டோபர் 2022 இல் தொடங்கப்பட்டது. இந்த சேவையானது நாட்டில் மனநல ஆரோக்கிய சேவையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டணமில்லா சேவை தொடங்கப்பட்டதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,00,000 அழைப்புகளை பெற்றுள்ளது என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சேவை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 42 செயல்பாட்டு டெலி மனஸ் பிரிவுகள் மூலம், தற்போது 20 மொழிகளில் ஒரு நாளைக்கு 1,300 அழைப்புகளை வழங்குகிறது. இரண்டு லட்சம் அழைப்புகளில் 59.6% ஆண் அழைப்பாளர்களும் 40% பெண்களும் பயன்படுத்தியுள்ளனர். அழைப்பாளர்கள் கட்டணமில்லா உதவி எண்கள் 14416 அல்லது 1-800-891-4416 மூலம் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து அணுக வகை செய்யப்பட்டுள்ளது.