அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள்

டெலி மனஸ் (Tele MANAS) உதவி எண்

  • தேசிய தொலைநிலை – மனநலத் திட்டம் டெலி மனஸ்ஸின் மாவட்ட மனநலத் திட்டத்தின் மின்னணு பிரிவானது அக்டோபர் 2022 இல் தொடங்கப்பட்டது.
  • இந்த சேவையானது நாட்டில் மனநல ஆரோக்கிய சேவையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த கட்டணமில்லா சேவை தொடங்கப்பட்டதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,00,000 அழைப்புகளை பெற்றுள்ளது என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இந்த சேவை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 42 செயல்பாட்டு டெலி மனஸ் பிரிவுகள் மூலம், தற்போது 20 மொழிகளில் ஒரு நாளைக்கு 1,300 அழைப்புகளை வழங்குகிறது.
  • இரண்டு லட்சம் அழைப்புகளில் 59.6% ஆண் அழைப்பாளர்களும் 40% பெண்களும் பயன்படுத்தியுள்ளனர்.
  • அழைப்பாளர்கள் கட்டணமில்லா உதவி எண்கள் 14416 அல்லது 1-800-891-4416 மூலம் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து அணுக வகை செய்யப்பட்டுள்ளது.
Next அரசியல் அறிவியல் >