Tag: டிரான்ஸ்பாண்டர் (Transponder) பற்றி

அறிவியல்

மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ் மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.  டிரான்ஸ்பாண்டர் (Transponder) பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மீன்பிடி விசைப்படகுகிளல் பொருத்திட மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை (Transponders) உருவாக்கியுள்ளது. நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். இக்கருவியை படகில் பொருத்தி, புளுடூத் (Blue tooth) வாயிலாக அலைபேசியில் இணைத்து செயலி மூலம் (Mobile app) தகவல்களையும் பெறலாம். மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும். அதுமட்டுமின்றி, அதிக மீன்கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகிற்கு அனுப்ப இயலும். இக்கருவியின் மூலம் ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்டறிய இயலும்.