அறிவியல்

மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்

  • கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ் மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார். 

டிரான்ஸ்பாண்டர் (Transponder) பற்றி

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மீன்பிடி விசைப்படகுகிளல் பொருத்திட மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை (Transponders) உருவாக்கியுள்ளது.
  • நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
  • இக்கருவியை படகில் பொருத்தி, புளுடூத் (Blue tooth) வாயிலாக அலைபேசியில் இணைத்து செயலி மூலம் (Mobile app) தகவல்களையும் பெறலாம்.
  • மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும்.
  • அதுமட்டுமின்றி, அதிக மீன்கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகிற்கு அனுப்ப இயலும்.
  • இக்கருவியின் மூலம் ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்டறிய இயலும்.
Next அறிவியல் >